போலி டாக்டர் கைது

மங்கலம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
போலி டாக்டர் கைது
Published on

கலசபாக்கம்

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் அருகே மாதலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 38), இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

மேலும் இவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சோபனா, மங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் மங்கலம் போலீசார் போலி டாக்டர் பாலாஜியை கைது செய்தனர்.

மேலும் மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com