போலி டாக்டர் கைது

செந்துறையில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
போலி டாக்டர் கைது
Published on

நத்தம் அருகே செந்துறை பகுதியில், போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில், காசநோய் துணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் நத்தம் போலீசார் செந்துறை பகுதியில் உள்ள மருந்து கடை அருகே உள்ள மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 10-ம் வகுப்பு படித்துள்ள சுபாஷ் என்பவர், அங்கு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நத்தம் போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com