தவறி விழுந்த பெண் பலி

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
தவறி விழுந்த பெண் பலி
Published on

சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் ராசு. அவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 54). இவர், திண்டுக்கல் சிறுமலை பிரிவில் செயல்படுகிற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இவர், கோட்டையூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ்சில் கணவாய்பட்டி பஸ் நிறுத்தத்தில் ஏறினார்.

சிறுமலை பிரிவு அருகே பஸ் வந்தபோது அவர் இறங்குவதற்கு படிக்கட்டில் தயாராக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர், ஓடும் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சின்னம்மாளை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சின்னம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com