அம்மை நோய் பாதித்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது! - அறநிலையத்துறை விளக்கம்

தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மை நோய் பாதித்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது! - அறநிலையத்துறை விளக்கம்
Published on

சென்னை,

அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரப்பப்படும் தகவல் தவறானது என இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பரவும் செய்தி

அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல், அவர்களுக்காக மண்டபம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள விளக்கத்தில், "அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக திருக்கோவிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்தரித்து உண்மைக்கு புறம்பாக பரப்புகிறார்கள்"என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com