மூதாட்டி கொலை வழக்கில் விவசாயி கைது

பள்ளிபாளையத்தில் மூதாட்டி கொலை வழக்கில் விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி கொலை வழக்கில் விவசாயி கைது
Published on

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கந்தம்மாள் (வயது 90). இவர் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மருமகன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி மூதாட்டியை இரும்பால் அடித்து கொலை செய்தது என தெரியவந்தது. போலீசார் விசாரணையில் காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி அரசு (45) என்பவர் கந்தம்மாள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கந்தம்மாளை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த ரூ.12,500-ஐ செலவு செய்ததும் தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com