திருப்பத்தூர்: அறுந்து கிடந்த மின்சார கம்பியை எடுத்த விவசாயி சம்பவ இடத்திலேயே பலி

திருப்பத்தூர் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை எடுத்த விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்: அறுந்து கிடந்த மின்சார கம்பியை எடுத்த விவசாயி சம்பவ இடத்திலேயே பலி
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா சின்ன பசலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரகவுண்டர் மகன் சின்னகண்ணு (வயது 55) விவசாயி. நேற்று திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.

சின்னகண்ணு நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிற்கு வெளியே வந்த போது மின்சார கம்பி கீழே இருப்பதை கவனிக்காமல் ஏதோ ஒயர் அறுந்து உள்ளதாக கையில எடுத்து தூக்கிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து அக்கம் பக்கத்தில் சின்ன கண்ணு அளறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மின்சார துறையினருக்கும், தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து அவரது மகன் விக்ரம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com