மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
Published on

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள வடபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் மகன் பழனி (வயது 45). விவசாயி. இந்த நிலையில் நேற்று இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் பழனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com