பாம்பு கடித்து விவசாயி சாவு

ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்.
பாம்பு கடித்து விவசாயி சாவு
Published on

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியில் வசிப்பவர் வரதராஜ் (வயது 55). இவரது மனைவி ராதா (50). வரதராஜ் விவசாயம் செய்வதுடன், செங்கல் சூளையும் நடத்தி வந்தார். தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலையை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர் பாம்பை அடித்து கொன்றனர்.

அதன் பிறகு வரஜராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com