

ஈரோடு,
ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியானார்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பசவசெட்டி (வயது 62). இவர் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது தன்னுடைய தோட்டத்தில் மஞ்சள், உருளைக்கிழங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட விவசாயி டார்ச் லைட் அடித்து யானையை விரட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென யானை விவசாயியை துரத்தி காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.