

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் (வயது 55). இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, வடகிழக்கு பருவமழை காரணமாக அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திகேயனை மின்னல் தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.