விவசாயி தற்கொலை

திருக்குறுங்குடி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தற்கொலை
Published on

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் மேலகாட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 59). விவசாயி. இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடிவேல் விவசாய வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி பார்வதி கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வடிவேல் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com