விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி 4 பேர் மீது வழக்குப்பதிவு

விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டா. இது தொடாபாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா.
விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி 4 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் மாதேஷ் (வயது 20). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் சபரி (35). இவர்களுக்கிடையே நிலப்பிரச்சினை உள்ளது.

சம்பவத்தன்று மாதேஷ் தனக்கு சொந்தமான நிலத்தில் நெல்நாற்று பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சபரி தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து, மாதேசை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மனமுடைந்து காணப்பட்ட மாதேஷ், விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் சபரி, சரவணன், நாகம்மாள், அறிவழகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com