26ம் தேதி நெல்லையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள்.
26ம் தேதி நெல்லையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.9.2025 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com