19-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19-ம் தேதி காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 19-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

19-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2026-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான ‘‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 19.11.2026, வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

X