21-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

மே மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21-ம் தேதி காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
21-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், பாசன வசதிகள் மற்றும் வேளாண் சார்ந்த கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, 2026 மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21-5-2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள "முத்து அரங்கத்தில்" வைத்து நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்த உள்ளார். மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வரத்து) மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்கின்றனர்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள், உழவர் சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, தங்கள் பகுதி விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள், பயிர்ச் சாகுபடி தேவைகள் மற்றும் பாசனக் கால்வாய் முறையீடுகள் குறித்த கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com