தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், நாளை நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (22.1.2026, வியாழன்கிழமை) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






