ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை ஆனது.
ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
Published on

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று 18 டன் காய்கறிகள் மற்றும் 3 டன் பழங்கள் என மொத்தம் 22 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.8 லட்சத்து 18 ஆயிரத்து 690 -க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,410 பேர் வாங்கி சென்றனர்.

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.28-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.16-க்கும், புடலங்காய் கிலோ ரூ.36-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.44-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.52-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.72-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.20-க்கும், இஞ்சி கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அவற்றின் விலை சற்றே குறைந்தும் காணப்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.8 குறைந்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com