செல்போனில் நீண்ட நேரம் பேசியதை கண்டித்த தந்தை... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

இளம்பெண் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் தந்தை கண்டித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

திருவண்ணாமலை,

செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தந்தை கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லட்டு முத்தையா. இவர் தனது மகள் சரிதாகுமாரி (21 வயது) என்பவருடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் வீட்டு வளாகத்தின் பின்புறத்தில் உள்ள குடியிருப்பில் தந்தை, மகள் இருவரும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சரிதாகுமாரி செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை லட்டு முத்தையா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரிதாகுமாரி வீட்டின் மேல் பகுதியில் உள்ள கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சரிதாகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com