ஊட்டியில் கஞ்சா செடிகள் வளர்த்த தந்தை-மகன் கைது

ஊட்டி எல்க்ஹில் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கஞ்சா செடிகள் 19 கிலோ எடையில் அறுவடைக்கு தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், ஊட்டி எல்க்ஹில் பகுதியில் வீட்டின் அருகே கஞ்சா செடிகள் வளர்த்ததாக நேபாள நாட்டை சேர்ந்த முனி சவுத் (வயது 60), அவரது மகன் கோகுல் சவுத்(24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் சோதனை:

ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 6 கஞ்சா செடிகள் 19 கிலோ எடையில் அறுவடைக்கு தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பிடுங்கி அழித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேபாளத்தில் இருந்து கஞ்சா விதைகள் கொண்டு வந்து வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com