எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை

மாநில அரசு தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு இல்லை என பாஜக எம்எல்ஏ போஜராஜன் கூறினார்.

எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை
Published on

சென்னை,

`எப்.சி.ஆர்.ஏ மசோதாவிற்கு பாஜக ஆதரவு இல்லை என பாஜக எம்எல்ஏ போஜராஜன் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.

மத்திய அரசு கொண்டுவரும் எப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் வெளிநாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அறக்கட்டளைகளை முறையாக நிர்வகிக்கவே உதவுகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகப் பெறப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மிகவும் அவசியமானது. எனவே மாநில அரசு கொண்டுவரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை.

தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக எப்.சி.ஆர்.ஏ மசோதாவில் சில திருத்தங்களை தான் மத்திய அரசு செய்கிறது. அறக்கட்டளை சரியாக நிர்வகிக்க வேண்டும். சமூக திட்டங்களுக்கு பெறும் நிதி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திருத்தம் அவசியம் என்று தான் பா.ஜ.க நினைக்கிறது. மாநில அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை என மசோதாவுக்கு எதிரான தமிழக அரசின் தனி தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் கூறினார்.

வெளிநடப்பு செய்து திரும்பி வந்த பாஜக எம்.எல்.ஏ

"பாஜக எம்எல்ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பேரவைக்கு வந்துள்ளார்.. முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?" என சபாநாயகர் கேள்வி எழுப்பியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com