

சென்னை,
ஒரு பெண் பிரதிநிதியை மாமன்றத்தில் இவ்வாறாக அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-
சக மக்கள் பிரதிநிதி என்றும் பாராமல், சேலம் மாநகராட்சி காங்கிரஸ் துணை மேயர் சாரதா தேவியின் இருக்கையை மாற்றுவதற்காக, மேயரே கவுன்சிலர்களுடன் சென்று நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தனது உரிமைக்காகத் தரையில் அமர்ந்து முழக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பெண் துணை மேயரை, 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ள மேயரின் சர்வாதிகார நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தின் மாண்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையில்தான் அடங்கியுள்ளது. ஒரு பெண் பிரதிநிதியை மாமன்றத்தில் இவ்வாறாக அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.