தூக்குப்போட்டு பெண் தற்கொலை

கடனை திருப்பி செலுத்தமுடியாததால் மன உளைச்சலில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

பட்டுக்கோட்டை நகர் அறந்தாங்கி சாலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 44). கணேசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் பழனியம்மாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாத நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்த பழனியம்மாள் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேசன் பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com