பெண் பலி

தஞ்சையில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலியானார்.
பெண் பலி
Published on

தஞ்சை ராஜப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 56). இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டிற்கு அருகே உள்ளே கடைக்கு பால் வாங்குவதற்காக ராஜப்பாநகர் சாலை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com