

சென்னை,
சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது;
"தமிழகத்தில் டெங்கு பரவல் முக்கிய சுகாதார பிரச்சினையாக இருந்து வருகிறது. நடப்பாண்டில் தற்போது வரை 14,581 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. டெங்கு பரவமல் தடுக்க முதற்முறையாக அறிவியல் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதாவது, டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ள மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
ரூ. 43 லட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆய்வில் டெங்கு கொசு பரவலை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பொதுமக்களும் டெங்கு கொசு பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீடுகளை சுத்தமாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்தல் போன்ற நடவடிக்கைகளை மக்களும் மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.