சில்லறைக்கு சண்டை: ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்

500 ரூபாய் நோட்டை கொடுத்தால் சில்லரை இல்லை என்று சொல்கிறாயா என்று ஹோட்டல் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சில்லறைக்கு சண்டை: ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்
ஹோட்டல் உரிமையாளர்
Published on

நாமக்கல்,

நாமக்கல்லில் ரூ.500 நோட்டை கொடுத்துவிட்டு 3 சிகரெட் கேட்டபோது, சில்லரை இல்லை என்று கூறிய ஹோட்டல் உரிமையாளரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டல் வியாபாரம்

நாமக்கல் நகர் பகுதியில் உள்ள ஒரு முக்கிய சாலையில் ஹோட்டல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு இந்த ஹோட்டலில் வழக்கம்போல் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.

4 இளைஞர்கள்

அப்போது அந்த கடைக்கு 4 இளைஞர்கள் கொண்ட ஒரு கும்பல் வந்தது. அவர்கள் கடையின் உரிமையாளரிடம் சென்று, தங்களுக்கு 3 சிகரெட்டுகள் தருமாறு கேட்டுள்ளனர். உரிமையாளரும் சிகரெட்டுகளை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.

ரூ.500 நோட்டு

3 சிகரெட்டுகளுக்கு பணமாக அந்த இளைஞர்கள் தங்களது பையிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்துள்ளனர். சிகரெட்டின் மதிப்பு மிக குறைவு என்பதால், அவ்வளவு பெரிய தொகைக்கு தன்னிடம் தற்போது சில்லரை இல்லை என்று ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், வேறு ஏதேனும் சிறிய தொகை இருந்தால் தருமாறும், அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறும் கேட்டுள்ளார்.

வாக்குவாதம்

இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல், 500 ரூபாய் நோட்டை கொடுத்தால் சில்லரை இல்லை என்று சொல்கிறாயா என்று கூறி தகாத வார்த்தைகளால், ஹோட்டல் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சரமாரி தாக்குதல்

வாக்குவாதம் முற்றவே, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த கும்பல், ஹோட்டல் உரிமையாளரை சட்டையை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்க தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்களும், அங்கிருந்த பொதுமக்களும் ஓடிவந்து அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் அவர்களையும் மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டது.

அரசு மருத்துவமனை

இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், வலியால் அலறித்துடித்தார். உடனடியாக அவரை மீட்ட ஊழியர்கள், சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள அந்த 4 மர்ம நபர்களையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com