பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது.
பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
Published on

மேல்மருவத்தூர்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர்.

முன்னதாக உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள்.

இதனிடையே பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. இறுதி சடங்கு நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com