சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் தீ விபத்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் தீ விபத்து
Published on

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் ரெயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடற்கரை ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்று ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது ரெயில் நிலையத்தின் 3வது மற்றும் 4வது நடைமேடையில் உள்ள கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பயணிகள் உள்பட யாருக்கும் காயம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து  ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com