விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
Published on

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தாயாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com