

தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராபர்ட் என்பவரது பைக்கில் ஒரு நல்ல பாம்பு புகுந்தது. அருகில் இருந்த தொழிலாளர்கள் பாம்பின் மீது தண்ணீர் ஊற்றி பார்த்தும் பாம்பு வெளியே வரவில்லை. இதனையடுத்து சிப்காட் தீயணைப்பு- மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து அலுவலர் புன்னவனகட்டி, ஏட்டு யோகமணிசங்கர், செந்தில்குமார், சக்திவேல், சாமுவேல், அந்தோணிராஜ், தவசி ஆகிய வீரர்கள் விரைந்து வந்து பைக்கில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.