தீவுத்திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தீவுத்திடலில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தீவுத்திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி புத்தாக்கத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இன்று முதல் தொடங்கி 17-ந்தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நாளையில் இருந்து சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் என கிட்டத்தட்ட 16 இடங்களில் மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்டது. அதற்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com