ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு - இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவை இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு - இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு
Published on

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 ஆம் தேதி(நாளை) மற்றும் 9 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 14,573 வாக்குச்சாவடிகளில், முதற்கட்டமாக 7,921 வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளையும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேவைப்படும் போது அல்லது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அங்குள்ள நிலையை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com