தமிழில் முதன் முதலாக அச்சிடப்பட்ட பைபிள் - லண்டனில் கண்டுபிடிப்பு

யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக பைபிளை திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழில் முதன் முதலாக அச்சிடப்பட்ட பைபிள் - லண்டனில் கண்டுபிடிப்பு
Published on

சென்னை,

தமிழில் முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான புதிய ஏற்பாடு பைபிள், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த பைபிள் கடந்த 2005 ஆம் ஆண்டு மாயமானதையடுத்து, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் பைபிளை கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன பைபிள், லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன் என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். இந்த பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பைபிளை திருடியது யார்? எப்படி லண்டனுக்கு சென்றது? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com