மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

திசையன்விளை:

பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

பலத்த காற்று

கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி பெருமணல், பஞ்சல், தோமையர்புரம், கூட்டப்புளி, ஜார்ஜ்நகர், மிக்கேல் நகர் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் மீன்பிடி படகுகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

கடல் சீற்றம்

வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகமாக இருந்ததாக வும், காற்று பலமாக வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com