தாம்பரம் அருகே ஒரே இடத்தில் 5 நாய்கள் உயிரிழப்பு.. விஷம் வைத்து கொலையா?

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார், நாய்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தாம்பரம் அருகே ஒரே இடத்தில் 5 நாய்கள் உயிரிழப்பு.. விஷம் வைத்து கொலையா?
போலீஸ் விசாரணை
Published on: 

சென்னை,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் ஒரே இடத்தில் 5 நாய்கள் அடுத்தடுத்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இடத்தில் 5 நாய்கள் பலி

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட ஹாரிங்டன் சாலையில் இன்று (திங்கட்கிழமை) காலையில் சாலையோரம் ஒரே இடத்தில் 5 நாய்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

இறந்த நாய்கள், வாயில் ரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டன. இதனால் சமூக விரோதிகள் எவரேனும் இந்த நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார், நாய்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் கொடூரம்- மக்கள் அச்சம்

ஏற்கனவே கடந்த மாதம் இதே சேலையூர் மற்றும் மாடம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 17 தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஐ.டி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சுவடு மறைவதற்குள் மீண்டும் 5 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com