

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் அரசு பெண்கள் பாதுகாப்பு மையம் அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி மாணவிகள் விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் ஆகியோர் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தீபாவளியை ஒட்டி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் 4 பேரும் விடுதி மைய பெண் பாதுகாவலர் தேன்மொழியுடன் சேர்ந்து சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்றனர். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மாணவிகள் 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற பாதுகாவலர் தேன்மொழியும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஏரியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களும் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.