குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் இரவு 8 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. இதன் எதிரொலியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பணிகள் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

குளிக்க தடை

நேற்று மதியத்திற்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள் பலத்த மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. குறிப்பாக ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் அங்கு மாலை 6 மணி முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

அதேபோன்று மெயின் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் இரவு 8 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுதவிர கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், மயிலப்பபுரம், ஆம்பூர், தென்காசி, திரவியநகர், மத்தளம்பாறை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com