சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது பச்சைநிற லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு
Published on

துபாயில் இருந்து 326 பயணிகளுடன் நேற்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் மீது மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது பச்சைநிற லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானி நிலை குலைந்தாலும், சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com