சென்னையில் மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் இரு விமானங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று மாலை, திடீரென பலத்தகனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதன்படி மழை காரணமாக தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் இரு விமானங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன. இதன்படி கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் திருப்பதிக்கும், கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கும் திருப்பிவிடப்பட்டது.

திடீர் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com