கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
Published on

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், கேரள மாநில மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். விடுமுறை காலங்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்த அருவிக்கு நீர்வரத்து மேற்குத் தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளக்கெவி ஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 29-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com