வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
கோவை குற்றாலம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை அடுத்து, பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, கோவை மாவட்ட வனத்துறை தடை விதித்து நுழைவு வாயிலை மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும், கோவை குற்றாலத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்து, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com