குமாரபாளையம் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
Published on

நாமக்கல்,

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் அனைத்து நீரும் காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதையடுத்து அங்கு வசித்து வந்த குடும்பங்களைச் சேர்ந்த 340 நபர்களை நகராட்சி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் வருவாய் துறையினர் தங்கவைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com