

சென்னை,
சென்னை ஆவடியை அடுத்த கொசவம்பாளையம்த்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மதகுகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறியது. இந்த வெள்ள நீர் கூவம் ஆறு வழியாக சென்று கடலில் கலப்பதால் அருகே இருக்கும் தரைப்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருநின்றவூரைச் சுற்றியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தினசரி வேலைக்குச் செல்வோர் 20 கி.மீ. சுற்றி பூந்தமல்லி, திருவள்ளூர், திருமழிசை வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும் வாகன நெரிசலுடன் காணப்படும் திருநின்றவூர் தரைப்பாலம், போக்குவரத்து தடையால் ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.