மேம்பால கட்டுமான பணி: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

காலை நேரங்களில் 8.30 மணி முதல் 11.00 மணி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க,மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேம்பால கட்டுமான பணி: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை,

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ் காந்தி சாலையின் மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பார்க் சந்திப்பு வரையிலான மேம்பால கட்டுமான பணிக்காக அச்சாலையின் அகலம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை நேரங்களில் ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே, காலை நேரங்களில் 8.30 மணி முதல் 11.00 மணி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க, பின்வரும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தற்போதுள்ள போக்குவரத்து பாதைக்கு கூடுதலாக, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பூங்கா நோக்கி செல்லும் வாகனங்கள், "எதிர் பாதையின்" ஒரு பகுதி சாலையில் வி.எச்.எஸ். ஆஸ்பத்திரிக்கு அருகிலுள்ள யு-டர்ன் வரை சுமார் 300 மீட்டர் தூரம் செல்ல அனுமதிக்கப்படும். இந்த போக்குவரத்து ஏற்பாடு நாளை மறுநாள் முதல் செயல்படுத்தப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com