ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு டவர் பிரச்சினை மீண்டும் வர அதிக வாய்ப்பு- தென்னிந்திய சிஇஓ

ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு டவர் பிரச்சினை மீண்டும் வர அதிக வாய்ப்பு உள்ளது என தென்னிந்திய சிஇஓ சங்கர நாராயணன் கூறி உள்ளார். #Aircel
ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு டவர் பிரச்சினை மீண்டும் வர அதிக வாய்ப்பு- தென்னிந்திய சிஇஓ
Published on

சென்னை

தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். ஆத்திர அவசரத்திற்குக் கூட மற்றவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடங்கியதாக அதன் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் அப்போது விளக்கம் அளித்திருந்தார். பின்னர் படிப்படியாக் சரிசெய்யபட்டது தற்போது சிக்னல் கிடைக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் ஏர்செல்லுக்கும், டவர் நிறுவனங்களுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவன சி.இ.ஓ. சங்கரநாராயணன் தகவல் கூறி உள்ளார்.

இது குறித்து ஏர்செல் நிறுவன தென்னிந்திய சிஇஓ சங்கர நாராயணன் கூறுகையில், ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு டவர் பிரச்சினை மீண்டும் வர அதிக வாய்ப்பு உள்ளது என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com