மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் பெண்கள் தொழில் முனைவோராவதற்கு ஆன்லைன் மூலம் பயிற்சி இன்று நடக்கிறது

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் பெண்கள் தொழில் முனைவோராவதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் பெண்கள் தொழில் முனைவோராவதற்கு ஆன்லைன் மூலம் பயிற்சி இன்று நடக்கிறது
Published on

சென்னை,

இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக வாரம் ஒருமுறை தொழிற்பயிற்சிகளை நடத்தி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நேரடியாக தொழிற்பயிற்சி அளிக்க முடியாத காரணத்தினால் ஆன்லைன் மூலமாக பயிற்சி வளர்ச்சி' என்ற பெயரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஞாயிறுதோறும் தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 18-ந் தேதி (இன்று) தொழில் முனைவோர் ஆவதற்கான 10 படிகள் என்ன? தொழில்முனைவோராக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதலும், மத்திய-மாநில அரசின் அனைத்து திட்டங்களும் மற்றும் மானியங்களும் அனைத்து தொழிலும் பதிவு செய்யும் வழிமுறைகளும் அரசு அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய ஆண்ட்ராய்டு செல்போனில் form.wewatn.com/9361086551 என்பதன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் பனைசார்ந்த பொருட்கள் தயாரிப்பவர்கள் 9176163425 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.

பெண்கள் தங்களுடைய அனைத்து தயாரிப்புகளையும், தாங்கள் வாங்கி விற்கும் பொருட்களையும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கு எந்தவித கட்டணமும் இன்றி சங்கம் மூலமாக ஏற்பாடு செய்துள்ள https://rebrand.ly.Eshopee என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com