சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.24 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய டிராலி பை மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகளர், அதனை திறந்து சோதனை செய்தனர்.

அதில், டிராலி பைக்குள் ரகசிய அறை வைத்து அதற்குள் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவற்றில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சி மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

அவரிடம் இருந்து ரூ.24 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சென்னை வாலிபரை கைது செய்து, பிடிபட்டது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com