தூத்துக்குடியில் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி


தூத்துக்குடியில் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி
x

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் வல்லநாடு கலைமான் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் வல்லநாடு கலைமான் சரணாலயம், குதிரைமொழி காப்புக் காடு (தேரிகாடு), சாலிகுளம் காப்புக் காடு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் இயக்கம் நடைபெற்றது. இப்பணியில் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.

இதில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்தின் சுகாதாரப் பணியாளர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் வனக் களப் பணியாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் அருகிலுள்ள பஞ்சாயத்து பிளாஸ்டிக் கழிவு பதப்படுத்தும் பிரிவுகளில் ஒப்படைக்கப்பட்டன.

1 More update

Next Story