சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி

மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மழை காலங்களில் ஓடைகளில் வெள்ளம் செல்வதால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட மாட்டார்கள்.

இந்த நிலையில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வரவிருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் 7ம் தேதி வரை சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com