

சென்னை,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்பு சகோதரி சத்தியபாமாவைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதல்-அமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்திவிட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். இதுதான் தி.மு.க.வின் டி.என்.ஏ. தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.