முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்.
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் மறைவுக்கு, அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். ஆரம்பகால கட்சி தொண்டர் அரங்கநாயகம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை கட்சி பணிகள் சம்பந்தமாக நேரில் சந்தித்து பேசுபவர்களில் இவரும் ஒருவர்.

கட்சி தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கட்சி பணிகளை ஆற்றியுள்ள அரங்கநாயகத்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com